PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM

![]() |
ஆனால் காதைப்பிளக்கும் வாகன இரைச்சல் பிளஸ் நெரிசல்,குளிப்பதற்கு காத்திருக்கும் நீண்ட வரிசை,குளிக்குமிடத்தில் காணப்படும் காட்டுக்கத்தல்,நெரிசல், தள்ளு முள்ளு,தாறுமாறான ரூம் கட்டணம் போன்றவை கண்முன் வந்து குற்றாலப்பயணத்தை தள்ளிப்போடச் சொல்லும்,அல்லது தயக்கத்தை தந்து நிறுத்திவிடும்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக நிலமை மாறியிருக்கிறது.
![]() |
பள்ளிகள் திறந்து குழந்தைகளின் படிப்பு செலவிற்கு படியளக்கவே மக்களிடம் பணம் போதாத காரணத்தால் குற்றால சுற்றுலாவினை தள்ளிவைத்துவிட்டார்கள் போலும்..
மெயினருவி,ஐந்தருவி போன்ற இடங்களில் கூட்டம் மிகக்குறைவே நன்கு ஆசை தீர குளிக்கமுடிகிறது.மிதமான துாரலும் சாரலுமாக ரம்மியமான சூழலும் நிலவுகிறது.
பழைய குற்றாலத்தில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம், ஒரு இளைஞரை பலி வாங்கியதை அடுத்து பழைய குற்றாலம் பக்கமே போக மக்கள் பயப்படுகின்றனர், மேலும் அங்கு குளிப்பதற்கு நேரக்கட்டுப்பாடும் இருப்பதால் போவதையும் தவிர்க்கிறார்கள்.
![]() |
குற்றாலம் பஸ் நிலையம் எதிரே இருக்கும் லாட்ஜ்கள் காலியாகக் கிடக்கின்றன ரோட்டிற்கே வந்து அழைக்கின்றனர் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் இந்த நிலை இப்படியே நீடிக்காது இன்னும் கொஞ்சம் மழை பெய்து வெயில் நேரம் குறைந்து அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததும் மக்கள் அடித்துபிடித்து வரத்துவங்கிவிடுவர்,அதற்குள் முடிந்தவர்கள் சென்று குற்றால சீசனை அனுபவித்துவிட்டு வந்துவிடுங்கள்.
-எல்.முருகராஜ்



