PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM
![]() |
சென்னையில் முதல் முறையாக நடந்து முடிந்த குதிரையேற்றப் போட்டியின் நிறைவு விழாவில் பல்வேறு சாகசங்களைக் காட்டிய குதிரகைளையும் அதை அற்புதமாகக் கையாண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளையம் பார்வையாளர்கள் பராட்டினர்.
![]() |
தனியார் குதிரையேற்ற மையத்தைச் சார்ந்த இசபெல்லா என்பவர் சொல்வதை எல்லாம் அவர் ஒட்டிவந்த குதிரை கேட்டது மிக அமைதியாக நிதானமாக பதட்டமில்லாமல் எல்லா தடைகளையும் அவரது குதிரை தாண்டியது ,அது மட்டுமல்ல கொஞ்சமும் களைத்துப் போகாமல் ஜாலியாக வீரநடையும் போட்டது.
![]() |
இந்தக்குதிரையை ஓட்டிய இசபெல்லாவே சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார், அதே நேரம் தமிழக போலீஸ் பிரிவைச் சேர்ந்த காசீம் என்பவரும் குதிரையை மிக லாவகமாக கையாண்டார்.,ஆனால் மித வேகத்திற்கு பதிலாக மிக வேகம் எடுத்ததால் தடைகளைத்தட்டிவிட்டு பவுல் பாயிண்ட் பெற நேர்ந்தது.
![]() |
இவர்களைப் போலவே ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் குறைவின்றி செயல்பட்டனர்.அவர்களது குதிரைகள் தடைகளைத்தாண்டும்போது காட்டிய வேகம் அபாரமாக இருந்தது.
![]() |
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை குதிரையில் வந்த வீரர்களாவது பராவாயில்லை வீராங்கனைகள் அநியாயத்திற்கு ஒல்லியாக இருந்தனர்,ஐம்பது கிலோவிற்கு மேல் இருந்தால் குதிரையில் ஏறுவதற்கே அனுமதிக்கமாட்டார்கள் போலும்.
நிறைவு நாளான்று குதிரையேற்றம் மட்டுமின்றி ஏடிவி எனச் சொல்லப்படும் எல்லா தரைதளங்களிலும் ஒடக்கூடிய போலீசார் கடற்கரை ரோந்துப்பணியில் பயன்படுத்தக்கூடிய சிறிய வாகனத்தை வைத்தும் சில போட்டிகள் நடத்தப்பட்டது.
![]() |
சென்னை மக்களுக்கு வீரதீர சாகசங்கள் கொண்ட கூடுதல் பொழுது போக்கு அம்சம் ஒன்று கிடைத்துள்ளது.
-எல்.முருகராஜ்







