sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 03, 2026 ,சித்திரை 20, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

விளக்குத் திரி ஒளியில் நடக்கும் பழமையான நாடகம்

/

விளக்குத் திரி ஒளியில் நடக்கும் பழமையான நாடகம்

விளக்குத் திரி ஒளியில் நடக்கும் பழமையான நாடகம்

விளக்குத் திரி ஒளியில் நடக்கும் பழமையான நாடகம்

1


PUBLISHED ON : மே 02, 2026 02:52 PM

Google News

PUBLISHED ON : மே 02, 2026 02:52 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூருக்கு அருகில் இருக்கிறது மெலட்டூர். ஊரின் பெயரைச் சொன்னாலே பாகவத மேளா மட்டும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதுவே அந்த ஊரின் அடையாளமாக ஆகியிருக்கிறது.Image 1571959சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இது, நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களின் ஆதரவுடன் செழித்தோங்கியது. ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு குடிபெயர்ந்த கலைஞர்களால் இக்கலை மெலட்டூரில் நிலைநிறுத்தப்பட்டது.Image 1571961'பாகவதர்'கள் (பக்தர்கள்) சூத்ரதாரியாக இருந்து, கதை சொல்லி, நாடகத்தை நடத்துவதால் இது பாகவத மேளா என்றழைக்கப்படுகிறது.இது பக்தி, இசை, நடனம் மற்றும் நாடகம் கலந்த ஒரு கோவில் கலை வடிவமாகும். தெலுங்கு மொழியில் அமைந்த இந்த நாடகங்களில் ஆண் கலைஞர்கள் மட்டுமே பெண் வேடமிட்டு நடிக்கின்றனர்.Image 1571962ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தியை ஒட்டி, அங்குள்ள வரதராஜ பெருமாள் சன்னதியில் இரவு முழுவதும் நாட்டிய நாடகங்கள் நடத்தப்படுகின்றன. கலைஞர்கள் இதனை ஒரு பக்தியாகவே கருதி, ஊதியமின்றி நடிக்கின்றனர். பெண்கள் வேடத்தையும் ஆண்களே ஏற்று நடிப்பது இதன் தனிச்சிறப்பு.Image 1571963பிரஹலாத சரித்திரம், ருக்மாங்கதா சரித்திரம், மார்கண்டேய சரித்திரம், ஹரிச்சந்திரா போன்றவை முக்கிய நாடகங்களாக அரங்கேற்றப்படுகின்றன.இதில் பிரஹலாத சரித்திரம் மிகவும் பிரபலமாகும்.இந்தக் கலை, பரதநாட்டியம் மற்றும் யக்ஷகானம் ஆகியவற்றின் கலவையாகவும், பழங்கால சமஸ்கிருத நாடக மரபுகளைத் தமிழ்நாட்டில் தக்கவைத்துள்ள ஒரு முக்கிய கலை வடிவமாகவும் பார்கப்படுகிறது.Image 1571964இந்த வருடம் மெலட்டூரில், பாகவத மேளா நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.இரணியனை நரசிம்மர் வதம் செய்யும் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட பிரஹலாத சரித்திரம் இரவு 10 மணிக்கு துவங்கி காலை 5 மணி வரை நடைபெற்றது.Image 1571960பாரம்பரிய எண்ணெய் விளக்குகளின் திரி ஒளியிலும் பாரம்பரிய உடைகளிலும் நடைபெற்ற நாடகத்தை விடியும் வரை அமர்ந்து பார்வையாளர்கள் ரசித்தனர். தொடர்ந்து அரிச்சந்திர நாட்டிய நாடகமும், ஹரிஹர லீலா விலாச நாட்டிய நாடகம், ருக்மணி கல்யாண நாட்டிய நாடகங்கள் நடைபெறவுள்ளது.

படங்கள்,கட்டுரை;தஞ்சாவூர் சுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us