sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

ஒவ்வொரு மனிதரும் ஒரு உலாவும் புத்தகமே...

/

ஒவ்வொரு மனிதரும் ஒரு உலாவும் புத்தகமே...

ஒவ்வொரு மனிதரும் ஒரு உலாவும் புத்தகமே...

ஒவ்வொரு மனிதரும் ஒரு உலாவும் புத்தகமே...


PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1269394
மரபுக்கவிஞராகவும்,எழுத்தாளராகவும்,உற்சாகப் பேச்சாளராகவும் வலம்வரும் மரபின் மைந்தன் முத்தையா எழுதியுள்ள 'பழகிப் பார்த்ததில் இவர்கள்' என்ற புத்தகம் இவரது 75 வது படைப்பாகும்.

தமிழ் ஆளுமைகளாக அறியப்பட்ட 33 பேர்களுடன் இவர் பழகிய அனுபவங்களை புத்தகமாக வடித்துள்ளார்.இந்த புத்தகத்தின் அறிமுக விழா சென்னை ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.விழாவில் இசைக்கவி ரமணன்,வழக்கறிஞர் சுமதி,இயக்குனர் சுகா,கலந்து கொண்டு பேசினர்,விழா நிறைவாக முத்தையா ஏற்புரை நிகழ்த்தினார்.

முத்தையா பேசுகையில்,உலகம் என்பது ஒரு பெரும் நுாலகம் இங்கு உலாவும் ஒவ்வொரு மனிரும் ஒரு புத்தகமே..இந்த புத்தகங்களை படித்துக் கொண்டே இருக்கலாம் ஆனால் படித்தை பகிரவும் வேண்டுமல்லவா அதற்காகவே இந்தப் புத்தகம்.

Image 1269396


ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டால் அது பழக்கமாகவேண்டும் அந்தப் பழக்கம் நட்பாக வளரவேண்டும் அந்த நட்பு ஒரு காலகட்டத்தில் உறவாக மலரவேண்டும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் யாரும் யாரையும் பார்க்கவோ பழகவோ விரும்புவதில்லை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் ஒரு அரை சென்டிமீட்டர் அகலத்திற்கு ஒரு பாசாங்கான சிரிப்பை உதிர்த்துவிட்டு கடந்துவிடுகின்றன.

குன்றக்குடி அடிகளார் முதல் கவிஞர் வாலி வரை நான் பழகிய ஒவ்வொருவரும் ஓரு விதத்தில் மிகப்பெரிய ஆளுமைகளே.அவர்கள் எல்லாம் தங்கள் தகுதியாக கருதியது தங்களது அறிவை மட்டுமே.

அவர்களது எளிமையும் பண்பும் பாசமும் தமிழ் மீதான பற்றும் அளவிடமுடியாதது இனி காண்பதற்கரியது, இப்படி எல்லாம் தங்களை இலக்கியத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ரத்தமும் சதையுமாக நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறைக்கு சொல்ல விளைந்ததே இந்தப் புத்தகம்.

அன்றைய காலகட்டத்தில் எதுவுமே இல்லை ஆனால் நிறைவாக இருந்தது இன்றைய காலத்தில் எல்லாமே இருக்கிறது ஆனால் நிறைவாக இல்லை காரணம் இலக்கிய வெற்றிடம், இலக்கியம்தான் நம்மை மென்மைப்படுத்தும் மேன்மைப்படுத்தும் செழுமைப்படுத்தும்.

அந்த இலக்கியத்தின் வளத்தை மீட்டெடுக்க வேண்டும்,இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளவர்களின் படைப்புகளை தேடிப்பிடித்து நிச்சயம் படிப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது அதற்கான தொண்டுதான் இந்தப் புத்தகம்.

நான் பழகியவர்களிடம் பேசிய உண்மையை எல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதவில்லை ஆனால் எழுதியதெல்லாம் உண்மை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்,அதே போல இவர்களைப்பற்றி நான் எப்படியெல்லாம் எழுதலாம் என ரூம் போட்டு யோசித்து எழுதவில்லை, அது எழுத்தாகவும் இருக்காது, மனதில் என்ன தோன்றியதோ அதை மடமடவென்று எழுதியுள்ளேன் இன்னும் பலரைப்பற்றி எழுத உள்ளேன்.,என்று முத்தையா பேசினார்

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us