பார்வையாளர்களை கவர்ந்துள்ள 'ஐஸ் ஆப் மெட்ராஸ்' புகைப்படக் கண்காட்சி
பார்வையாளர்களை கவர்ந்துள்ள 'ஐஸ் ஆப் மெட்ராஸ்' புகைப்படக் கண்காட்சி
PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM

சென்னை நுங்கம்பாக்கம் ஆர்ட் ஹவுசில் நேற்று துவங்கிய ஐஸ் ஆப் மெட்ராஸ் என்ற புகைப்படக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்கள் பலவும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
ஆறாவது முறையாக ஆர்ட் ஹவுசில் நேற்று கண்காட்சி துவங்கியது.கண்காட்சியினை விசாலம் சிட்பண்ட் இயக்குனர் உமாபதி துவக்கிவைத்தார்.கண்காட்சியில் 161 படங்கள் பல்வேறு தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.மேலும் பல படங்கள் டி,வி.,மூலம் ஸ்லைடு ேஷாவாக காட்டப்படுகிறது.வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அனுமதி இலவசம்,
-எல்.முருகராஜ்