sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

ஹோலி..ஜாலி..

/

ஹோலி..ஜாலி..

ஹோலி..ஜாலி..

ஹோலி..ஜாலி..


PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1392276சென்னையில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் மிண்ட் ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் தங்கசாலை ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணமயமாக காட்சி தந்தது.Image 1392279இது வட மாநிலத்தவர் திருவிழா என்றாலும் பாதிக்கு மேல் உள்ளூர் தமிழ் ஆட்கள்தான் இருந்தனர், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை போன்ற தொலை துாரங்களில் இருந்தெல்லாம் சிலர் வந்திருந்தனர்.தொன்னுற்று ஒன்பது சதவீதம் பேர் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள்தான்,Image 1392282ஒருவர் முகத்தில் ஒருவர் வண்ணப்பொடியை பூசி மகிழ்வதுதான் இந்த பண்டிகையின் பிரதான நோக்கம்.ஆனால் அந்த நோக்கமெல்லாம் நேரம் ஆக ஆக மாறிக்கொண்டே இருந்தது.வாளி வாளியாக மாடிகளில் இருந்து வண்ணம் கலந்த தண்ணீர் ஊற்றுவதும்,நண்பர்கள் மற்றும் நண்பிகளை துாக்கிப் போட்டு பிடிப்பதும்,ஒட ஒட விரட்டி உடல் முழுவதும் சாயத்தண்ணீர் பூசுவதும்,சாயநீர் நிரம்பிய பலுானை துாக்கி எறிந்து விளையாடுவதுமாக தெருவையே துவம்சம் செய்தனர்.Image 1392278ஆனால் அனைவர் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி,எத்தனை வண்ணம் உண்டா அத்தனை வண்ணத்தையும் முகத்திலும், உடம்பிலும், உடையிலும், பூசியபடி காணப்பட்டனர், அந்த முகங்களை மறக்காமல் நுாறு முறை செல்பி எடுத்தும் குரூப் போட்டோ எடுத்தும் ஆனந்தப்பட்டனர்.Image 1392280இந்த நிகழ்வை படமெடுக்கச் சென்ற புகைப்படக்கலைஞர்களும் வண்ணப்பொடியின் வீச்சில் இருந்து தப்பவில்லை, கடந்த வருட அனுபவம் காரணமாக பழைய சட்டையை போட்டு வந்திருந்தனர், அதே போல கேமராவிற்கும் பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர்.Image 1392277யாருக்கும் தொந்திரவு தரவில்லை, இரண்டு மணி நேரம் பண்டிகையை கொண்டாடி முடியும் வரை யாரும் இவர்களையும் யாரும் தொந்திரவு செய்யவில்லை, அந்தந்த வயது ஆனந்தத்தை ஹோலி பண்டிகையின் பெயரால் அனுபவித்தனர், அனைவருக்கும் ஹோலி ஜாலியாகவே இருந்தது.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us