PUBLISHED ON : ஏப் 23, 2024 12:00 AM

![]() |
![]() |
கலைஞர்களான அலமு குமரேசன், ராஜஸ்ரீ நாயக் மற்றும் சோனல் வர்ஷ்னேயா ஆகியோர் தங்கள் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் அவதானிப்புகளிலிருந்து பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய பன்முக ஆய்வுகளை தங்களது ஒவியங்கள் மூலமாக வழங்கியிருக்கிறார்கள்.சமகால பெண்மையின் சாரத்தை படம்பிடிப்பதில், கிராமப்புற நிலப்பரப்புகள், நகர்ப்புற சூழல்கள் அன்றாட வாழ்வின் சாதாரணமான அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
![]() |
சோனாலின் வச்சிக் தொடர், விளையாட்டுத்தனமான செதுக்கல்களுடன் வழங்கப்பட்டுள்ளது, குழந்தை பருவத்திலிருந்து முதிர்வயது வரையிலான பயணத்தை விவரிக்கிறது, அதே நேரத்தில் ராஜஸ்ரீயின் படைப்புகள் பெண்கள் சுதந்திரம் மற்றும் நவீனத்துவத்துடனாஜ வாழ்க்கையை சித்தரிக்கிறது. அலமுவின் எம்பிராய்டரி மற்றும் கலப்பு ஊடக கலவைகள் பெண்மையின் உளவியல் ஆழங்களை ஆய்வு செய்து யதார்த்தமான சித்தரிப்புகளை வழங்குகின்றன.
![]() |
சமூக ஆணாதிக்க அழுத்தங்களுக்கு மத்தியிலும் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தும் பெண்களின் நெகிழ்ச்சி மற்றும் வலிமைக்கு இந்த கண்காட்சி ஒரு சான்றாக விளங்குகிறது.இந்தக் கண்காட்சி வருகின்ற 30 ஆம் தேதி வரை நடைபெறும் பார்வையாளர் நேரம் பகல் 11 மணி முதல் மாலை 7 மணிவரை,அனுமதி இலவசம்.
![]() |
![]() |
![]() |







