sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன்

/

போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன்

போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன்

போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன்

1


PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1404700கோல்கட்டா அணி அபார வெற்றி அடைந்ததை விட சென்னை அணி மோசமான தோல்வி என கிரிக்கெட் விமர்சகர்கள் விமரிசித்து வருகின்றனர்.

நேற்றைய போட்டியில் அணியில் யாருமே சரியாக விளையாடவில்லை ஆனால் தோனி மீதுதான் காட்டமாய் விமர்சனங்கள் பாய்கிறது விமர்சனங்களில் அதிகம் இடம் பெறுவது அவரது வயதுதான்.Image 1404701ஆனால் தொடர் தோல்வி காரணமாக மைதானம் வழக்கமான உற்சாகத்தில் இல்லை பாதிக்கு பாதி காலியாகத்தான் இருந்தது அந்த கூட்டமும் முதல் பாதியிலேயே முடிவை அறிந்தது போல இடத்தை காலி செய்து கொண்டு கிளம்பினர்.Image 1404703அணி கேப்டன் ருத்ராஜ் கையில் அடிபட்டு கட்டுப்போட்டுக் கொண்டு ஒய்வு பெற்றுவிட வேண்டாம் என ஒதுங்கியிருந்த தோனியின் மீது மீண்டும் கேப்டன் சுமை ஏற்றப்பட்டது.

பார்வையாளர்களில் பலரும் 'கூல் கேப்டன்' என்றும் 'கம் பேக் கேப்டன்' என்றும் எழுதப்பட்ட பாததைகளை துாக்கிக்காட்டியபடி மாடங்களில் காணப்பட்டனர்.,ஆனால் எங்கே கூலாவது ஒருவர் சொதப்பினால் அடுத்தவராவது மட்டையை சுழற்றுவார் என்று பார்த்தால் சொல்லிவைத்தால் போல் அனைவருமே சொதப்பினர்.,நுாறு ரன் எடுப்பதற்குள் மூச்சு வாங்கினர்.

எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து கேப்டன் தோனி பதிலடி கொடுப்பார் பாருங்கள் என்று காமெண்டரியில் இருந்து வந்த வார்த்தைகளை பொய்யாக்கி ஒரு ரன்னில் அவுட்டாகி அவரும் வந்த வேகத்தில் திரும்பினார்.

சரி பேட்டிங்கில் விட்டதை பவுலங்கில் பிடித்துவிடுவர் என்று பார்த்தால் ரன்களை வாரிக் கொடுத்தனர் 11 ஒவரில் கோல்கட்டா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது,கைகொடுத்து தோளில் தட்டிக் கொடுத்து தோனி பாராட்டினார் வேறு என்ன செய்வது.

போட்டி முடிந்து வெளியே வரும்போது பார்வையாளர்கள் மத்தியில் அடுத்த மேட்சல பாருங்க சென்னை அணி எப்படி விளையாடுதுன்னு..என்று பேசிக்கொண்டனர்.

அப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் உலகம் இன்னும் உங்களை நம்புதுப்பா..பார்த்து செய்யுங்க..

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us