sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

லவா,குசா

/

லவா,குசா

லவா,குசா

லவா,குசா


PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1325768ராவணனை வீழ்த்திய ராமர் சீதையுடன் அயோத்தியில் பட்டாபிேஷகம் காண்கிறார்.,இது நடந்த கொஞ்ச நாளில் அயோத்தி மக்கள் சீதையின் மீது பழி சுமத்துகின்றனர்.Image 1325769இந்த வீண் பழியை தாங்கமுடியாமலும், இந்த பழியின் சுமையால் கணவர் ராமர் கலங்குவதைக் காணமுடியாமலும், சீதை தான்மட்டும் காட்டுக்கு சென்று வால்மீகியின் ஆஸ்ரமத்தில் தஞ்சமடைந்தார்.Image 1325770அப்போது கர்ப்பமாகயிருந்த சீதை இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்,லவன் குசன் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தைகளை பராக்கிரமசாலிகளாக வால்மீகி வளர்த்தார்.Image 1325771தங்கள் தந்தை யார் என்றே தெரியாமல் வளர்ந்த லவனும் குசனும் ஒரு ஒரு கட்டத்தில் ராமரையே எதிர்த்து நிற்கின்றனர்.அவர் யாகத்தில் இருந்த குதிரையை கொண்டுவந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக ராமர் அனுப்பிய பரதன்,சத்ருக்கன் உள்ளீட்டோரை வென்று அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்புகின்றனர்.

வல்லமை பொருந்திய அனுமனையும் தோற்கடித்து அவரது கைகளைக் கட்டி தன் தாயார் சீதை முன் கொண்டுவந்த நிறுத்துகின்றனர்.

அனுமனின் அந்த நிலை கண்டு துடிதுடித்துப் போன சீதை உடனடியாக அனுமனை விடுவித்ததுடன் தான் இலங்கையில் இருந்த போது அனுமன் செய்த உதவிகளை எல்லாம் மகன்களிடம் எடுத்துரைத்தாள்.

லவனும் குசனும் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன் தாங்கள் யார் என்பதையும் அறிந்துகொண்டனர் அதன் பின் தந்தை ராமரை சந்தித்தது சபையில் அங்கம் வகித்தது எல்லாம் பின்கதை.

அனுமனை வென்ற கதையை மட்டும் அழகான கதகளி காவியமாக சென்னை திருவான்மியூர் கலாச்சேத்ராவில் நடைபெற்ற கதகளி நாட்டிய விழாவில் கடைசி நாள் நிகழ்வாக நடத்தினர்.,பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us