PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

பெரும்பாலான பள்ளிகளில் கோடை விடுமுறை விட்டாகிவிட்டது.
இந்த கோடை விடுமுறைக்கு குழந்தைகளை உருப்படியான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது பெற்றோரின் கடமை
அப்படியான உருப்படியான இடங்களில் ஒன்றாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் விளங்குகிறது.
வங்கதேசம், மியான்மர், இலங்கை, சைபிரியா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.
வெளிநாடுகளில் இருந்து குழுவுடன் தனியாக வரும் ஆண் பறவைகள், வேடந்தாங்கல் சரணாலயத்தில் தன்னுடைய இணையை தேர்ந்தெடுத்து, இணை சேர்ந்து, கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து பாதுகாத்து வருகின்றன.
இப்போது பறவைகளை பார்ப்பதற்கு புதிய நவீன டெலஸ்கோப் கருவிகளும் பொருத்தியுள்ளனர்.
நுழைவுக்கட்டணம்,டெலஸ்கோப்பிக் கட்டணம் உண்டு.