தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/மிஸ் யூனிவர்ஸ் இந்தியா:மகுடம் சூடிய கேரள பெண் கசியா

மிஸ் யூனிவர்ஸ் இந்தியா:மகுடம் சூடிய கேரள பெண் கசியா

மிஸ் யூனிவர்ஸ் இந்தியா:மகுடம் சூடிய கேரள பெண் கசியா


PUBLISHED ON : ஆக 24, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2026 07:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று மிக விமரிசையாக நடைபெற்றது.Image 1612411இப்போட்டியில் கேரளாவைச் சேர்ந்த கசியா லிஸ் மேஜோ 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

அவருக்கு, 2025-ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா வெற்றியாளர் மணிகா விஸ்வகர்மா கிரீடத்தை வழங்கி கௌரவித்தார். வெற்றிக்குப் பின் கசியா லிஸ் மேஜோ அரங்கத்தில் கூடியிருந்த பார்வையாளர்களுக்குத் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.Image 1612412இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், குஜராத்தின் அனுஸ்ரீ சதாவ்லேகர் இரண்டாம் ரன்னர்-அப் பட்டத்தையும் வென்றனர். இதே போல இதர பிரிவுகளில் வெற்றி பெற்ற அழகிகளும் சேர்ந்து கொள்ள அனைவரும் மேடையில் ஒன்றாக நின்று புகைப்படக் கலைஞர்களுக்குக் போஸ் கொடுத்தனர்.Image 1612413விழாவின் சிறப்பு நிகழ்வாக பாலிவுட் பிரபலங்களின் ரேம்ப் வாக் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது:முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் மற்றும் நடிகை செலினா ஜெய்ட்லி ஆகியோர் இணைந்து ரேம்ப் வாக் செய்து அசத்தினர்.Image 1612414நடிகை உர்வசி ரவ்தேலா சிறப்புடையில் ரேம்ப் வாக் செய்து விழாவிற்குப் பொலிவு சேர்த்தார்.2025 அழகி மணிகா விஸ்வகர்மாவும் மேடையில் கம்பீரமாக உலா வந்தார்.Image 1612415நிகழ்ச்சியின் நிறைவில், பட்டம் வென்ற கசியா லிஸ் மேஜோ, வைஷ்ணவி கணேஷ், அனுஸ்ரீ சதாவ்லேகர் உள்ளிட்ட போட்டியாளர்கள் நடிகை சுஷ்மிதா சென்னுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us