sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

பராம்பரியங்களை பதிவு செய்யும் நவீன்ராஜ்.

/

பராம்பரியங்களை பதிவு செய்யும் நவீன்ராஜ்.

பராம்பரியங்களை பதிவு செய்யும் நவீன்ராஜ்.

பராம்பரியங்களை பதிவு செய்யும் நவீன்ராஜ்.


PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1395676நவீன்ராஜ்

சென்னையில் வசிக்கும் சுயாதீன புகைப்படக்கலைஞர்.

வாழ்க்கைக்கு தேவையான பொருளீட்ட திருமணம் உள்ளீட்ட விசேஷங்களை படமெடுக்கும் இவரது கேமரா, இன்னோரு பக்கம் மக்களின் கலாச்சாரம், பராம்பரியத்தை தேடித்தேடி பயணிக்கிறது.Image 1395681கடந்த பதிமூன்று வருடங்களாக பல இடங்களுக்கு பயணித்து இவர் எடுத்த புகைப்படங்கள் பல மீடியாக்களில் வெளியாகி இவருக்கு புகழைத் தேடித்தந்துள்ளன.இவரது படங்கள் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.Image 1395678ஒவ்வொரு மனிதரின் கண்களிலும் சொல்லப்படாத கதைகள் நிறையவே இருக்கிறது சம்பந்தப்பட்ட படங்கள் அந்த மனிதரின் உலகத்தைக் காட்டும் ஜன்னலாகிறது இது போன்ற உணர்வுபூர்வமான படங்களை பதிவு செய்யும் இவரது பயணத்தில் சமீபத்தில் இடம் பெற்றதுதான் 'இருளர் திருவிழா'.

இருளர் சமூகத்தினர் தமிழகத்தின் முக்கிய பழங்குடியினர், கால்நடைகளை மேய்த்தல், மூலிகைகள் சேகரித்தல், வேட்டையாடுதல், மற்றும் விவசாய உதவியாளர்களாக செயல்படுதல் போன்ற இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை இவர்கள் பின்பற்றுகின்றனர்.Image 1395679இச்சமூகத்தினர் வருடந்தோறும் தங்களது பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக மகாபலிபுரத்தில் கூடுகின்றனர்.

'இருளர் திருவிழா' என்ற தலைப்பின் கீழ் தங்கள் பாரம்பரிய நம்பிக்கைகள், இசை, நடனம் மற்றும் தெய்வ வழிபாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.Image 1395680இருளர் சமூகத்தினரின் பழக்க வழக்கங்களை அவர்களது பராம்பரிய வழிபாடுகளை தனது கேமராவில் பிரமாதமாக பதிவு செய்துள்ள புகைப்படக்கலைஞர் நவீன்ராஜ் தனது புகைப்படங்கள் மூலம் இருளர் சமூகத்தினருக்கு நலம்தரும் நல்லதொரு பதிவை தந்துள்ளார் என்றே கூறலாம்.Image 1395682-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us