பந்தலுாருக்கு சிறப்பு சேர்க்கும் சேற்று கால்பந்து போட்டி
பந்தலுாருக்கு சிறப்பு சேர்க்கும் சேற்று கால்பந்து போட்டி
PUBLISHED ON : ஜூலை 18, 2025 12:00 AM

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு, அய்யன்கொல்லி, தாளூர், பிதர்காடு, அமாபலமூலா பகுதி இளையோர்கள் மத்தியில் கால்பந்து போட்டி அதிக வரவேற்பு பெற்று உள்ளது.இப்பகுதி பழங்குடியின இளைஞர்கள் மற்று அனைத்து தரப்பு இளைஞர்களும் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், மாநில அளவிலும் தேசிய அளவில் பலரும் கால்பந்து போட்டியில் சாதித்து வருகின்றனர்.
அதேபோல் தமிழகத்திலும் முதல் முறையாக தாளூர் கல்லூரியில், சேற்று கால்பந்து போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மழைக்கால துவக்கத்தில், கல்லூரி வளாகத்தில் உள்ள வயல்வெளியில் கால்பந்து விளையாட ஏதுவாக, உழுது அதில் தண்ணீர் நிரப்பி மாணவர்களுக்கு கால்பந்தும், மாணவிகளுக்கு ஹேண்ட் பால் விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தவாறு, தங்கள் திறமையை வெளிக்காட்டியது, விளையாட்டில் இவர்களுக்கு உள்ள ஆர்வத்தை உணர்த்தியது. கல்லூரி செயலாளர் ராஷித்கஷாலி கூறுகையில், கல்லூரியில் பெரும் பாடங்கள் மட்டும் இன்றி, மாணவர்களின் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் சேற்று கால் பந்து போட்டி.
ஒரு நாள் திருவிழாவாக காலையில் ஆரம்பித்து மாலையில நிறைவு பெறும் இந்த சேற்று கால்பந்தாட்ட போட்டியை கேரளா அரசு தானே ஏற்று நடத்தி ஊக்கப்படுத்துவது போல நமது அரசும் நடத்தும் இவர்களுக்கு வேண்டிய ஆதரவு தந்தால் இந்தப்பகுதியில் சுற்றுலா வளரும் மற்ற பகுதிகளும் இந்தப் சேற்று கால்பந்தாட்டம் வளரும்.படங்கள்,கட்டுரைபந்தலுார் ராஜேந்திரன்.