பிங்க் பிளமிங்கோ என்பது நீர்நிலைகளைச் சார்ந்த வலசைப் பிறவைகள்,நீண்ட கழுத்தும் கால்களும் சிறகுகளிலும்,கால்களிலும்,அலகிலும் பிங்க் நிறமும் கொண்ட அழகிய பறவையாகும்.
ஆஸ்திரேலியா போன்ற குளிர் பிரதேசங்களில் இருந்து ஏப்ரல் முதல் ஜீலை வரை வலசையாக இந்த பறவைகள் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளுக்கு வருகின்றன.
தமிழ்நாட்டில் புலிகாட் பறவைகள் சரணாலயத்தில் அதிகம் காணப்படும்,தற்போது துாத்துக்குடி பகுதிக்கு அதிகம் வந்துள்ளது இதற்கு இங்குள்ள உவர்நீர் நிலங்கள் மற்றும் அல்கே போன்ற இதற்கான உணவு கிடைப்பதால் இருக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணியார், முத்துசேரி, பாண்டியபுரம், சீர்காழி ஏரி மற்றும் உவர்நீர்க் குளங்களில் இந்த பறவைகள் குழுக்களாகத் திரண்டு காணப்படுகின்றன.தற்போது சீசன் முடிந்து தம் தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
இந்த அழகிய பறவைகள் துாத்துக்குடிக்கு வந்ததால் சந்தோஷம் அடைந்தவர்களில் வருண் சந்திரனும் ஒருவர்.இவர் கோவையில் என்ஜீனிரிங் படிக்கும் துாத்துக்குடி மண்ணின் மைந்தர்,இவருக்கு புகைப்படம் எடுப்பது அதிலும் இயற்கை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பதில் அதிகம் ஆர்வம் உண்டு,இதன் காரணமாக தனது கேமராவில் துாத்துக்குடியில் முகாமிட்டுள்ள பிங்க் பிளமிங்கோ பறவைகளை பல கோணங்களில் படம் எடுத்து நமது 'தினமலர் இணையத்திற்கு' அனுப்பியுள்ளார்.இவருடன் பேசுவதற்கான எண்:7373732858
-எல்.முருகராஜ்