PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM


மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி சார்பாக உலக புகைப்பட தின விழா சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்றது.
புகைப்படத்துறை கடந்த ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்ததைவிட சமீபகாலத்திய அதன் வளர்ச்சி வேகமானது,விவேகமானது.

தொழில்நுட்ட வளர்ச்சி என்பது காலத்தின் கட்டாயம்,ஸ்மார்ட் போன் போட்டோகிராபியின் வளர்ச்சியும் அப்படித்தான் அபரிமிதமாக இருக்கிறது,பாயிண்ட் அண்ட் சூட் என்ற கேமராக்களையே ஒட்டு மொத்தமாக காணாமல் போகச் செய்துவிட்டது,ஒரு ஆக் ஷன் போட்டோகிராபி மட்டும்தான் ஸ்மார்ட் போனால் எடுக்கமுடியாது மற்ற எல்லாவற்றையும் எடுக்க முடியும் என்ற நிலைக்கு அது வந்து கொண்டு இருக்கிறது.
இன்றைய கேமரா நிறுவனங்கள் மிர்ரர்லெஸ் கேமராவை மட்டும்தான் உற்பத்தி செய்கின்றன அதைத்தான் மார்கெட்டிங் செய்கின்றன ஆகவே டிஎஸ்எல்ஆர் கேமரா போல மிர்ரர்லெஸ் கேமரா இல்லை என்று பேசுவதில் அர்த்தம் இல்லை பழைய ஸ்டாக் டிஎஸ்எல்ஆர்.,கேமராக்கள் மட்டுமே விலைக்கு வருகிறது அதற்கு டெக்னிக்கல் சப்போர்ட்டும் கிடையாது ஆகவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மிர்ரர்லெஸ் கேமராதான் இனி கோலோச்சப் போகிறது.
மேற்கண்டவாறு அசோக் கன்டிமல்லா பேசினார்,அவருக்கு பள்ளி தாளாளர் அசோக் கரோடியா பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்,மூத்த உறுப்பினர் விவேகானந்தன் நினைவு பரிசு வழங்கினார்,மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி தலைவர் டாக்டர் அழகானந்தம் வரவேற்றார்,சாமிநாதன் வரவேற்றார்,,புகைப்பட போட்டி நடைபெற உதவிய பாலசுப்ரமணியம்,ரங்கராஜன்,ரவி ஆகியோருககு பாராட்டு தெரிவிக்கப்பட்டது,பாலு நன்றி தெரிவித்தார்.எம்பிஎஸ்.,சார்பாக நடைபெற்ற அகில இந்திய புகைப்படப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற படங்கள் திரையிடப்பட்டன.கூட்டத்திற்கு பள்ளி மாணவ,மாணவியர் உள்பட திரானபேர் கலந்து கொண்டனர்.
--எல்.முருகராஜ்

