sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

பண்டோரா பறவைகள் பூங்கா

/

பண்டோரா பறவைகள் பூங்கா

பண்டோரா பறவைகள் பூங்கா

பண்டோரா பறவைகள் பூங்கா

1


PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1304454திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையானது ஊட்டி,கொடைக்கானல் போல பிரபலமான மலை வாசஸ்தலமாக இல்லாவிட்டாலும் வளர்ந்துவரும் சுற்றுலா தலமாகும்.Image 1304456இது இந்த சுற்றுலா தலத்திற்கு பிளஸ் பாயிண்டும் கூட

நியாயமான வாடகையில் தங்குவதற்கு வீடுகளே கிடைக்கின்றன,சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுவது இல்லை வாகன நெரிசல் கிடையாது ஆகவே எதையும் அமைதியாக ரசிக்கலாம்,அட்வென்சர் பார்க்குள் உள்ளன.Image 1304457ஏலகரிவரும் சுற்றுலா பயணிகள் பலரையும் கவர்வது பண்டோரா பறவைகள் பூங்காதான்.Image 1304458பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும் .300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு-அயல்நாட்டு பறவை இனங்கள் திறந்த வெளியில் தங்கவைக்கப்பட்டுள்ளன. மக்காவ் கிளி முதல் நெருப்புக் கோழி வரை பலவிதமான பறவைகள் இருக்கின்றன.இவைகள் மனிதர்களுடன் பழக பழக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் கையில் தரப்படும் உணவை சாப்பிட கையிலேயே வந்து உட்காருகிறது, தலை தோள் மீது உட்கார்ந்து விளையாடுகிறது.இது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பெரிதும் பிடிக்கிறது.Image 1304459பறவைகள் மட்டுமின்றி பலவிதமான எலிகள் குட்டை மாடுகள், முயல்கள் மற்றும் உடும்புகள் போன்றவைகளையும் காணலாம்.

இது ஒரு தனியார் பூங்கா அனுமதிக்கட்டணம் உண்டு அனுமதிக்கட்டணம் அதிகமாக பட்டது ஆனால் உள்ளே கிடைத்த ஆனந்தம் அந்த கட்டணத்தை நியாயப்படுத்தியது. ஏலகிரி பஸ் நிலையத்தில் இருந்து 4 கி.மீட்டர் துாரத்தில் உள்ளது, பஸ் போக்குவரத்து கிடையாது உள்ளூர் வாடகை ஆட்டோ அல்லது சொந்த வாகனம் உபயோகித்து போகலாம்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us