





ஜராசந்தன் பீமன் யார் என்பதை அறியாமல் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க உன்னுடன் போரிட வேண்டும் என்கிறான்.ஜராசந்தன் போரிட சம்மதிக்கிறான்.
ஜராசந்தனுக்கும்,பீமனுக்கும் 27 நாட்கள் போர் நடைபெறுகிறது,இந்தப் போர் மகாபாரதத்தில் மிகவும் விவரிக்கப்படுகிறது,பீமனால் ஜராசந்தனை எளிதல் கொல்லமுடியவில்லை, கடைசியில் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி ஜராசந்தனை இரு வேறு துண்டுகளாக்கி எதிரெதிர் திசையில் விட்டெறிந்த பிறகே ஜராசந்தன் இறந்தான்.
வலிமையும் ஆற்றலும் இருந்தாலும் தீமையின் பக்கம் இருந்தால் துர்மரணமே கிடைக்கும் என்பதற்கு உதாரணமான ஜராசந்தனின் கதையை, கதகளி நாட்டிய நடனமாக சென்னை திருவான்மியூரில் உள்ள கலாச்சேத்ரா நாட்டிய பள்ளியில் நிகழ்த்தினர்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நாட்டிய நாடகத்தை பலரும் ரசித்துப் பார்த்தனர்.
-எல்.முருகராஜ்.

