சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தட்சிணசித்ரா கலைக்கூட வளாகத்தின் சிறப்பு அங்கு பல்வேறு மாநில காலச்சார வீடுகள் இடம் பெற்றிருப்பதுதான்.
தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா உள்ளீட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 18 வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன, இப்போது 19 வது வீடாக கூர்க் பகுதியைச் சேர்ந்த கொடவர்களின் வீடு கட்டப்பட்டுள்ளது.
கொஞ்சம் கர்நாடகா,கொஞ்சம் தமிழ்நாடு,கொஞ்சம் கேரளா மாநில கலாச்சாரங்களின் கூட்டுதான் கொடவர்களின் கலாசாரம் என்பர் அவர்கள் வித்தியாசப்படுவது அவர்களது உணவு,உடை,திருமண முறைகளில்தான்.
கூர்க்பகுதியில் பழமையாக கொடவர் வீடு ஒன்று இடிபடப்போவதாக அறிந்து, அங்கு சென்று அதற்குரிய விலை கொடுத்து வாங்கி, அந்த வீட்டை அப்படியே பிரித்து இரண்டு ஆண்டுகளாக அதனைக் கொண்டுவந்த கட்டியுள்ளனர்.வீட்டினுள் கொடவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஹூண்டாய் மோபிஸ் இண்டியா அறக்கட்டளையினர் ஸ்பான்சர் செய்துள்ளனர்.இதன் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.திறப்பு விழாவினை முன்னிட்டு கொடவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.தட்சிணசித்ரா நிறுவனர் டெபோராதியாகராஜன்,நிர்வாக இயக்குனர் ஷரத்நம்பியார் உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.