

அப்படி வழிபாடு செய்யப்படும் இடங்களில் ஒவியமாகவோ சிற்பமாகவோ அவரது உருவம் இருக்கும் பெரும்பாலும் அந்த உருவமே வழிபடும் தெய்வமாகவும் இருக்கும்.
ஆனால் உருவமின்றி ஒரு இடத்தில் தாயம்மா என்பவர் வழிபாடு செய்யப்படுகிறார்.
அந்த இடம் சென்னை வியாசர்பாடியில் உள்ள கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலய வளாகமாகும்.
இங்கு ஒன்பதிற்கும் அதிகமான சித்தர்கள் அடங்கியுள்ளதாக இங்குள்ள சாமியார்கள் கூறுகின்றனர்.
அவர்களில் ஒருவராக தாயம்மாவை குறிப்பிடுகின்றனர்.
ஒரு பொது இடத்தை இப்படி சுத்தம் செய்யும் போது, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இந்த இடத்தில் தான் ஒரு சாதாரண ஆளே என்பதை உணர்ந்து பக்தியை நாடுவார்.
இந்த இடம் உள்பட இங்குள்ள பல ஏக்கர் இந்த தாயம்மாவிற்குதான் சொந்தம், அவர்தான் பல ஞானிகளை இங்கு வரவழைத்து தங்கவைத்து அழகு பார்த்தார்.
அந்த ஞானிகளின் பெயரிலேயே தனது இடத்தை தானமாகவும் வழங்கினார்.
எனக்கு என்று ஒரு உருவமோ ஒவியமோ சிற்பமோ இருக்கக்கூடாது நான் செய்த செயல்கள்தான் பக்தர்களுக்கு நினைவில் இருக்க வேண்டும் சுருங்கச் சொல்வதானால் என் முகத்தை விட அகமே பெரிதாக போற்றப்பட வேண்டும் என்று எல்லா சொத்துக்களையும் தானமாக வழங்கிவிட்டு இங்கு ஒரு துறவியைப் போல வாழ்ந்து சமாதியானார்.
அவரது சமாதியின் மீது கட்டப்பட்டதுதான் இந்த தாயம்மா சன்னதி.
-எல்.முருகராஜ்.

