sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..

/

என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..

என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..

என் சந்தோஷத்தின் அடையாளங்கள்..


PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1417150ராஜமாணிக்கம்

மூத்த புகைப்படக்கலைஞர்

கரூர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சங்க தலைவர்.

இவரது இன்னோரு பக்கம் கொஞ்சம் சுவராசியமானது.

முன்பை விட இப்போதெல்லாம் புகைப்படக்கருவிகள் அதாவது கேமராவின் தோற்றங்கள் வெகு வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது, ஆகவே பழமையான கேமராக்களை வருங்கால தலைமுறை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக பழங்காலத்து கேமராக்களை சேகரித்துவைத்துள்ளார்.

இவரிடம் இப்படி 380 கேமராக்கள் உள்ளன அவற்றில் தேர்ந்து எடுத்த 125 கேமராக்களை சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற டிஜி மீடியாவில் கண்காட்சியாக வைத்திருந்தார்.Image 1417149ஒரு படம் எடுக்க ஒரு பல்ப் மட்டுமே உபயோகிக்ககூடிய பிளாஷ் லைட் பொருத்திய கேமரா,துப்பாக்கி போன்ற கேமரா என்று கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பலவித கேமராக்களை பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

இந்த பழைய கேமராக்களில் 70 சதவீதம் ஒர்க்கிங் கண்டிஷனில் இருக்கிறது, இதெல்லாம் எனது சந்தோஷத்தின் அடையாளங்கள்,பழைய கேமரா கிடைத்தால் அதை வாங்கி எனது சேகரிப்பில் வைத்துக்கொண்டு இருக்கிறேன், எதிர்காலத்தில் இளைஞர்கள் இப்படி எல்லாம் கேமராக்கள் இருந்தது என்பதை தொட்டுப்பார்த்து தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.

இவரது எண்:94435 30531

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us