அபுதாபியில் திறந்து வைத்த பிரமாண்ட இந்து கோவிலின் சிறப்புகள்..
அபுதாபியில் திறந்து வைத்த பிரமாண்ட இந்து கோவிலின் சிறப்புகள்..
PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM
![]() |
27 ஏக்கரில் 7 கோபுரங்களுடன் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயனன் கோவிலை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்துள்ளார்.
![]() |
இது முஸ்லீம் நாடான அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலாகும்.2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.வெள்ளை பளிங்கு கற்கள் மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தி பழங்கால முறைப்படி மிகுந்த கலைநயத்துடன் நான்கு ஆண்டு காலம் கோவில் கட்டப்பட்டுள்ளது.இந்த கோவிலின் ஏழு கோபுரங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்டுகளை குறிக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்த கோவிலுக்கான நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.
![]() |
வெப்பம் மிகுந்த இந்த இடத்தில் உள்ள கோவிலானாலும் வெளிப்புற வெப்பம் கோவிலுக்குள் தெரியாதவாறு கட்டட அமைப்புகள் உள்ளது.கோவிலின் உள்ள ராமாயணம்,சிவபுராணம்,மற்றும் ஜெகன்னாதர் யாத்திரை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.காசியை நினைவுபடுத்தும் வகையில் படித்துறைகளும்,கங்கை சரஸ்வதி யமுனை நதிகள் சங்கமிக்கும் இடங்களைப் போலவும் அமைத்துள்ளனர்.
![]() |
இந்த கோவிலின் கட்டுமானத்தில் வெள்ளை பளிங்கு கற்கள் மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரும்பு பயன்படுத்தப்படவில்லை.கோவிலின் சுவர்களில் உள்ள அழகிய சிற்பங்கள் ராமாயணம், சிவபுராணம் மற்றும் ஜகன்னாதர் யாத்திரையின் கதைகளைச் சித்தரிக்கின்றன. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமும் இந்த கோவிலில் சித்தரிக்கப்பட்டுள்ளது.3டி சிமெண்ட் அச்சு முறையில் பாரம்பரிய கைவினைத்திறன் மூலம் உருவாக்கப்பட்ட நல்லிணக்க மண்டபமும் இந்த கோவிலில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் பூஜை மற்றும் சடங்குகளுக்கான பிரத்யேக வசதிகள் மட்டுமல்லாது மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. உதாரணமாக, கோவிலின் ஒரு பகுதியில், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற படித்துறைகளைப் போன்ற ஒரு இடம் கட்டப்பட்டுள்ளது.போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா அல்லது BAPS (பாப்ஸ்) எனப்படும் இந்து சமயப் பிரிவால் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.பல கடவுள்கள் இங்கே இருந்தாலும் இந்து கோவில் என்றே அழைக்கப்படுகிறது.
![]() |
சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக இக்கோயில் இருக்கும் என்பதைத் தாண்டி, அன்பு மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
எல்.முருகராஜ்






