PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

திருமலையில் ஆன்மிக விருந்து - பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் சிறப்புகள்
திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும் 'கோவிந்தா, கோவிந்தா' குரல்கள்,கோவில் மணி ஓசை, தாளவாத்தியங்களின் அதிர்வுகள்-இவை அனைத்தும் சேர்ந்து, சிரஞ்சீவி நகரம் திருமலையை ஆன்மிகத் திருவிழாவால் திளைக்கச் செய்கின்றன.
செப்டம்பர் 25ஆம் தேதி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை, மலையப்ப சுவாமி குருவாயூரக் கிருஷ்ணனின் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐந்து தலை கொண்ட வாசுகி நாகம் தன்னுடைய எஜமானரான கிருஷ்ணரை ஏந்திச் சுமந்து, நாலு மாட வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்றது நிகழ்வின் உச்சக் கட்டமாக அமைந்தது. அந்தத் தரிசனம், ஆயிரக்கணக்கான பக்தர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.
பாரம்பரியக் கலை நிகழ்ச்சி
பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 24ஆம் தேதி திருப்பதியில் உள்ள மஹாதி அரங்கில் தமக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கியது பி. ஆனந்த் ஜெயராம் தலைமையிலான பாரதநாட்டியம் குழு.
-எல்.முருகராஜ்