தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/பெங்களூருவை அதிரவைத்த பிரம்ம ரத உற்சவம்

பெங்களூருவை அதிரவைத்த பிரம்ம ரத உற்சவம்

பெங்களூருவை அதிரவைத்த பிரம்ம ரத உற்சவம்


PUBLISHED ON : பிப் 16, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 16, 2026 08:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காடு மல்லேஸ்வரர் சுவாமி கோவில்.

இந்த கோவிலில் நேற்று நடைபெற்ற பிரம்ம ரத உற்சவம் என்பது மிகவும் தனித்துவமான கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்வாகும்.Image 1536874பெங்களூருவின் பாரம்பரியப் பகுதியான மல்லேஸ்வரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 'பிரம்ம ரத உற்சவம்' வெறும் தேரோட்டம் மட்டுமல்ல; அது சிவபெருமானின் உக்கிரமான மற்றும் மங்கலகரமான வடிவங்களைக் கொண்டாடும் ஒரு திருவிழாவாகும்.Image 1536875இந்த ரத உற்சவம் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள மக்களின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது. பழங்கால சடங்குகளையும், கலைகளையும் இன்றும் மாறாமல் பின்பற்றி வருவது இந்த விழாவின் தனிச்சிறப்பு. சிவபெருமானின் ஆசியைப் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.Image 1536876இந்த விழாவில் ஆண்கள் பலர் மண்டையோட்டு மாலை அணிந்து ஆடும் நடனமாடியபடி வந்தனர். இது பொதுவாக சிவபெருமானின் 'ருத்ர' (உக்கிரமான) வடிவத்தையும், அழிக்கும் கடவுளான காலபைரவரின் அம்சத்தையும் குறிக்கிறது. பயத்தைப் போக்கி, ஆன்மாக்களின் தூய்மையை இது அடையாளப்படுத்துகிறது.Image 1536877பெண்கள் பலர் பாரம்பரிய மேள தாளங்கள் மற்றும் இசைக்கருவிகளை முழங்கினர்.இந்த இசைக்கேற்ப பக்தர்க்ள் பரவசத்துடன் ஆடிக்கொண்டு சென்றது அந்தப் பகுதியையே ஆன்மீக அதிர்வில் ஆழ்த்தியது.Image 1536878ஒரு பக்தர் தனது தலையில் கங்கை அம்மன் போன்ற பொம்மையைச் சுமந்து வந்தார். அதன் ஒரு பகுதியிலிருந்து நீர் பீய்ச்சி அடிப்பதும், மற்றொரு பகுதியிலிருந்து நெருப்பு ஜுவாலைகள் வருவதும் பார்ப்பதற்கு வியக்கத்தக்க காட்சியாக இருந்தது. இது சிவபெருமான் தனது ஜடாமுடியில் கங்கையைத் தாங்கியிருப்பதையும், அவரது நெற்றிக்கண் திறந்து நெருப்பை வீசுவதும் என ஒரே நேரத்தில் பிரதிபலித்து பரர்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us