தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/கொட்டும் மழையில் நடந்த திருமலை கருட சேவை

கொட்டும் மழையில் நடந்த திருமலை கருட சேவை

கொட்டும் மழையில் நடந்த திருமலை கருட சேவை


PUBLISHED ON : அக் 17, 2026 05:33 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2026 05:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இடைவிடாமல் கொட்டிய மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் கருட வாகனத்தில் வந்த பெருமாளை காத்திருந்து தரிசித்தனர்.Image 1632133திருப்பதி திருமலை பெருமாள் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் விமரிசையாக நடந்துவருகிறது.இந்த விழா தொடரின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை நேற்று இரவு நடைபெற்றது.Image 1632134ஒளிரும் திருவாபரணங்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு, கருட வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்தபடி, ஸ்ரீ மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து தன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.Image 1632135திருமலைக் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் பக்திச் கடலாகக் காட்சியளித்தது.

இடைவிடாது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், திரளான பக்தர்கள் கைகூப்பியும், கண்கள் பனிய உருக்கத்தோடும் 'கோவிந்தா... கோவிந்தா...' என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டு, கம்பீரமான கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மலையப்ப சுவாமியை தரிசித்தனர்.மழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்தபோதிலும், குடைகள், ரெயின்கோட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவைகளை பயன்படுத்தி கேலரியை விட்டு அகலாது நின்றிருந்தனர்.Image 1632136

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us