PUBLISHED ON : ஜூன் 27, 2026 03:14 PM

வெஸ்பா என்பது வெறும் ஒரு இருசக்கர வாகனம் மட்டுமல்ல; அது உலகளாவிய பேஷன், கலாச்சாரம், மற்றும் சுதந்திரத்தின் சர்வதேச அடையாளம். இரண்டாம் உலகப் போரின் இடிபாடுகளுக்கு நடுவே பிறந்து, இன்று 80 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகப் பயணிக்கும் வெஸ்பா, தனது 80-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இத்தாலி தலைநகர் ரோமில் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான திருவிழாவை நடத்தி வருகிறது.



1953-ல் வெளியான உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான 'ரோமன் ஹாலிடே, நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் ரோமின் வீதிகளில் வெஸ்பாவில் பயணிக்கும் காட்சிகள் வெளியான பிறகு, வெஸ்பாவின் புகழ் உலகமெங்கும் பரவி, அது ஒரு ஸ்டைல் அடையாளமாக மாறியது.
80 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பழங்கால வெஸ்பா ஸ்கூட்டர்களை அவற்றின் உரிமையாளர்கள் இன்றும் மிகக் கவனமாகப் பராமரித்து, நல்ல ரன்னிங் கண்டிஷனில் ஓட்டி வருகின்றனர். அதே நேரத்தில், பியாஜியோ நிறுவனம் தனது பாரம்பரியமான 'வளைந்த எஃகு உடல்' டிசைனை மாற்றாமல், இன்றைய காலத்திற்கு ஏற்ப இரண்டு வடிவங்களிலும் வெஸ்பாவைத் தயாரித்து வருகிறது:
இன்றும் உலகளவிலும் இந்தியாவிலும் வெஸ்பாவின் பெரும்பான்மையான விற்பனை பெட்ரோல் மாடல்களில்தான் நடக்கிறது.சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்காக அதிநவீன 'வெஸ்பா எலெக்ட்ரிகா' போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
80 ஆண்டுகளைக் கடந்தும், தலைமுறைகள் தாண்டியும் இளமை மாறாமல் பயணிக்கும் வெஸ்பா, இன்றும் உலகெங்கும் 2 கோடிக்கும் அதிகமான ஸ்கூட்டர்களுடன் சாலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ரோமில் தற்போது நடைபெறும் இந்த 80-வது ஆண்டு திருவிழா, வெஸ்பா உலக வரலாற்றில் என்றும் அழியாத ஒரு கலாச்சார அடையாளம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது
-எல்.முருகராஜ்
