நமது தமிழ்ப் பண்பாட்டில் கோவில் மணி ஓசை என்பது வெறும் ஒலி மட்டுமல்ல; அது மனதை ஒருமுகப்படுத்தும் தெய்வீக அலைவரிசை! அந்த நாதத்திற்கு உயிர் கொடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கைவினை மையமாகத் திகழ்கிறது நாமக்கல்.நாமக்கல், மோகனூர் சாலை, முல்லை நகரில் இயங்கி வரும் 'ஆண்டாள் மோல்டிங் லேபர் ஒர்க்ஸ்' நிறுவனம், பல்லாண்டு காலமாகப் பாரம்பரிய முறைப்படி கோவில் மணிகள், விளக்குகள் தயாரித்து இந்தியாவெங்கும் அனுப்பி புகழ்பெற்று வருகிறது.
பரமத்திவேலூர் தாலுகா, பில்லூர் படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ₹32 லட்சம் மதிப்பில் 600 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கோவில் மணி உருவாக்கப்பட்டுள்ளது.ஸ்தபதி காளிதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் வழிகாட்டலில், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவும் பகலுமாக 40 நாட்கள் உழைத்து இந்த மணியை வடிவமைத்துள்ளனர்.பித்தளை, துத்தநாகம்,வெள்ளியீயம், செம்பு மற்றும் இரும்பு ஆகிய உலோகங்களின் சரியான விகிதக் கலவையால் இது உருவாகியுள்ளது.இந்த மணியை அடித்தால் இதன் எதிரொலி நாதம் குறைந்தபட்சம் 2 கி.மீ தொலைவு வரை மிகத் தெளிவாகக் கேட்கும் திறன்கொண்டது.ஸ்தபதி காளிதாஸின் தந்தை ராஜேந்திரன் தொடங்கிய இத்தொழில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கு தடையின்றித் தொடர்கிறது.உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமர் கோவிலுக்கு, நாமக்கல்லில் தயார் செய்யப்பட்ட 1,000 கிலோ (1 டன்) எடையுள்ள ராட்சத மணி மற்றும் 100-க்கும் மேற்பட்ட சிறிய மணிகள் அனுப்பி வைக்கப்பட்டன.அயோத்தியில் இந்த ராட்சத மணியைப் பொறுத்தும்போது, ஒரு சிறிய ஆணி கூட அடிக்காமல் மிகத் துல்லியமாக மாட்டுவதற்காக நாமக்கல்லில் இருந்து ஒரு குழுவே லாரியில் பயணம் செய்து அந்தச் சாதனையைச் செய்து முடித்தது.அயோத்தி மட்டுமல்லாது, தமிழகத்தின் மற்றொரு புகழ்பெற்ற கோவிலுக்கும் ஒரே வார்ப்பில் 1 டன் எடையில் பிரம்மாண்ட மணியைச் செய்து கொடுத்து அசத்தியுள்ளனர் இந்த நாமக்கல் கலைஞர்கள்.கோவில் மணி அடிப்பதன் பின்னணியில் ஆன்மீகமும் அறிவியல் பூர்வமான மருத்துவ மகத்துவமும் இணைந்துள்ளன:கோவில் மணியை அடிக்கும் போது உருவாகும் 'ஓம்' என்ற பிரணவ ஓசை, மூளையின் வலது மற்றும் இடது பாகங்களை உடனடியாகச் சமநிலைக்குக் கொண்டுவந்து, கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது.மணியின் ஓசையிலிருந்து எழும் அதிர்வுகள் காற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு, சுற்றியுள்ள பகுதியின் எதிர்மறை ஆற்றல்களைப் போக்கி நேர்மறை அலைகளை உருவாக்குகின்றன.மணி ஓசைக்குச் சரித்திரத்தில் மிகப்பெரிய இடமுண்டு.