தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த விளையாட்ட?

எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த விளையாட்ட?

எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த விளையாட்ட?


PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

Image 1390481

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி ஜாம்ெஷட்பூர் அணிக்கு அபாரமாய் விளையாடினர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சென்னையில் அவ்வப்போது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டி நடந்து வந்தது.Image 1390482சென்னை அணி நாட்டில் உள்ள மற்ற பிரபல அணிகளுடன் நேரு ஸ்டேடியத்தில் தங்கள் திறமையைக் காட்டினர்.,ஆனால் பெரும்பாலும் தோல்வி அல்லது டிராவிலேயே ஆட்டம் முடிந்தது.இதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னையின் எஃப்சி அணி 24 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 6 டிரா, 11 தோல்விகளுடன் 27 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்துள்ளது.Image 1390483பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறமாட்டார்கள் என்ற நிலையில் சென்னை அணியும், ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட ஜாம்ெஷட் பூர் அணியும் நேற்று மோதின.ஏற்கனவே முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் ஆட்டம் சுமாராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. Image 1390484 ஜாம்ெஷட் பூர் அணியின் கால்களிலேயே பெரும்பாலும் பந்து இருந்தாலும் கிடைத்த வாய்ப்பு வீணாக்காமல் சென்னை அணி முன்னேறிச் சென்று கோல்கள் போட்டது, இதன் காரணமாக 5க்கு 2 என்ற கோல்கணக்கில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் உற்சாகமாய் குரல் கொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us