

தமிழகத்தில் பரதமும்,கேரளாவில் கதகளியும் போல கர்நாடக மாநிலத்தின் பிரபலமான நாட்டிய நாடகமாகும்.
உரையாடல்,பாட்டு,இசை,நடனம் என்ற கலவை கொண்டதாகும்.
நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களின் ஆடை, அலங்காரத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது.
சென்னையில் இந்த நாட்டிய நாடகம் கன்னடத்தில் நடந்தது என்றாலும் மொழிப்பிரச்னை இல்லாமல் ரசிக்க முடிந்தது.
ராமாயணத்தில் மாயமானுக்கு சீதை ஆசைப்பட்டு ராவணனால் கடத்தப்படும் அந்த ஒரு பகுதியை மட்டும் ஒரு மணி நேர நாட்டிய நாடகமாக ரசிக்கும்படி வழங்கினர்.
யகசகானம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நாட்டிய நாடகக் கலை.
-எல்.முருகராஜ்.

