/
வாராவாரம்
/
சிந்திப்போமா
/
சி.டி.சி.ஏ., 'லீக்' போட்டி அமிர்தம் அணி வெற்றி
/
சி.டி.சி.ஏ., 'லீக்' போட்டி அமிர்தம் அணி வெற்றி
ADDED : ஜன 07, 2026 05:12 AM

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் 'லீக்' நுழைவுக்கான 'நாக் அவுட்' போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. அமிர்தம் கிரிக்கெட் கிளப் அணியும், எலக்ட்ரா இ.வி. கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
அமிர்தம் கிரிக்கெட் கிளப் அணியினர் 25 ஓவரில் ஆறு விக்கெட்டுக்கு 203 ரன் எடுத்தனர். வீரர்கள் பன்னீர் செல்வம் 41, தனபால் 46, தனசேகர் 44 ரன் எடுத்தனர். எலக்ட்ரா அணியினர் 23.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்தனர். வீரர்கள் ஜகதீஷ் 30 ரன் எடுத்தார். எதிரணி வீரர் சுரேஷ் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
கோயம்புத்துார் அவஞ்சர்ஸ் அணியும், எஸ்.வி.ஆர். கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. கோயம்புத்துார் அவஞ்சர்ஸ் அணியினர் 24.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தனர். வீரர்கள் நவீன் 52, அமுதகுருநாதன் 38 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் மாணிக்கம் ஐந்து விக்கெட் எடுத்தார்.
எஸ்.வி.ஆர். அணியினர் 22.4 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தனர். வீரர் நடராஜன் 59 ரன் எடுத்தார். எதிரணி வீரர் சூர்ய பிரகாஷ் மூன்று விக்கெட் எடுத்தார். தொடர்ந்து போட்டிகள் நடக் கின்றன.

