தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்திப்போமா/மாணவர்களே… தகவல்களை சரி பார்க்க வேண்டும்!

மாணவர்களே… தகவல்களை சரி பார்க்க வேண்டும்!

மாணவர்களே… தகவல்களை சரி பார்க்க வேண்டும்!


UPDATED : அக் 10, 2026 12:34 PM

ADDED : அக் 10, 2026 12:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:34 PM ADDED : அக் 10, 2026 12:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய டிஜிட்டல் மற்றும் நவீன தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் எதை நம்புவது, எதைத் தவிர்ப்பது என்பதில் பெரும் குழப்பத்தை எதிர்கொண்டுள்ளனர். தேடுபொறிகள், சமூக வலைதளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆகியவை எத்தகைய கேள்விக்கும் சில நொடிகளில் பதில்களை அள்ளி வழங்குகின்றன. ஆனால் இந்த வேகம், துல்லியத்தை தருவதில்லை என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

தவறான தகவல்கள்



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால் தகவல்கள் நமக்கு மிக எளிதாகவும் வேகமாகவும் கிடைக்கின்றன. அறிவியல் கோட்பாடுகள், வரலாற்று நிகழ்வுகள் அல்லது ஒரு கட்டுரைக்கான தகவல்கள் என அனைத்தையும் ஏ.ஐ., மிகச் நேர்த்தியான ஆங்கிலத்திலும், முறையான பத்திகளிலும் சில கணங்களில் கொடுக்கிறது. ஆனால், இந்த தெளிவான தோற்றமே பல சமயங்களில் தவறான தகவல்களை உண்மை போல நம்ப வைத்து விடுகிறது. மேலோட்டமாக பார்க்கும் போது மிகச்சரியாக தெரியும், ஆனால் உண்மையான சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தகவல்களில் உள்ள தவறுகளை கண்டுபிடிக்க முடியும்.

நமக்கு கிடைக்கும் தகவல் உண்மையானதா, இல்லையா என்பதை ஆய்வு செய்வது இன்றியமையாத கல்வித் திறமையாகும். சமூக வலைதளங்களில் வரும் செய்திகள், ஏ.ஐ., உருவாக்கும் குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் உண்மையானவை போல தோற்றமளித்தாலும், அவற்றுள் பல உண்மையாக இருக்காது.

அடிப்படை கேள்வி



இதற்காக தொழில்நுட்பங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பது பொருளல்ல. மாறாக அவற்றை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு தகவலைப் பார்த்தாலும் அது எங்குிருந்து வருகிறது, அதற்கான ஆதாரங்கள் என்ன, நம்பகமான பிற ஊடகங்களில் இது குறித்த செய்தி உள்ளதா போன்ற அடிப்படை கேள்விகளை மாணவர்கள் கேட்க வேண்டும். முக்கியமான தகவல்களுக்கு சமூக வலைதளங்களை நம்பாமல் அதிகாரப்பூர்வ வலைதளங்களை பார்வையிடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

எதையும் உடனடியாக கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல், சற்று சிந்தித்து செயல்படும் முறையே மாணவர்களுக்கு உண்மையான டிஜிட்டல் அறிவை வழங்கும். கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களும், மாணவர்களுக்கு இந்த சரிபார்க்கும் திறனை வளர்க்க வேண்டும். உண்மை உலகை எதிர்கொள்ளும் துணிச்சலையும், தகவல்களை அலசி ஆராயும் கூர்மையான பார்வையையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us