தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்திப்போமா/மலைகளின் மடியில் கலைமகளின் கோவில்!

மலைகளின் மடியில் கலைமகளின் கோவில்!

மலைகளின் மடியில் கலைமகளின் கோவில்!


UPDATED : அக் 10, 2026 12:38 PM

ADDED : அக் 10, 2026 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:38 PM ADDED : அக் 10, 2026 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம் கல்லாறில், 1997ம் ஆண்டு சச்சிதானந்த சுவாமியால், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளி சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், 4 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு கல்வி வழங்கும், உண்டு உறைவிட பள்ளியாக செயல்படுகிறது. ரூட்ஸ் குழும தலைவர் ராமசாமி நிர்வாக அறங்காவலராகவும், கவிதாசன் பள்ளியின் செயலராகவும் உள்ளனர்.

கல்வியுடன் விளையாட்டு, யோகா, தியானம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. டென்னிஸ், இறகுப்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். அறிவியல், இசை, ஓவியம், நடனம், நாடகம், கராத்தே, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தனித்திறன்கள் வளர்க்கப்படுகின்றன.

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பள்ளிகளுடன் கலாசார பரிமாற்றத்தில் ஈடுபட்டு வரும் இப்பள்ளி, 2023ம் ஆண்டு ஜெர்மனி மாணவர்களை வரவேற்றது. 2025 செப்டம்பரில் இப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் ஜெர்மனிக்கு சென்று வந்தனர்.

மேட்டுப்பாளையம் ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைத் தத்தெடுத்துள்ள நிர்வாகம், அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இப்பள்ளி மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கார்த்திகேயன், மயிலானந்தம் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக் குழு வழிகாட்டுதலில், முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ் மற்றும் ஆசிரியர்கள் கல்விப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us