
டிசம்பர் 31, 1947
கன்னியாகுமரி மாவட்டம், வீரநாராயணமங்கலம் எனும் ஊரில், கணபதியா பிள்ளை - சரஸ்வதிதம்பதியின் மகனாக, 1947ல் இதே நாளில் பிறந்தவர் சுப்பிரமணியம் எனும் நாஞ்சில் நாடன்.
இவர் பள்ளிப் படிப்பை முடித்து, திருவிதாங்கூர் இந்து கல்லுாரி, திருவனந்தபுரம் மஹாத்மா காந்தி நினைவு கல்லுாரிகளில் படித்தார். மும்பை, தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் விற்பனை முகவராக பணியாற்றினார். பம்பாய் தமிழ்ச்சங்க மலரில் ஆசிரியராக பணியாற்றினார். பல இதழ்களுக்கு சிறுகதைகளை எழுதினார்.
கலைக்கூத்தன், வண்ணதாசன் வற்புறுத்தியதால்நாவல் எழுதினார். இவரது, 'தலைகீழ் விகிதங்கள்' நாவல், சொல்ல மறந்த கதை என்ற திரைப்படமானது.பரதேசி திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். 'சூடிய பூ சூடற்க' என்ற சிறுகதை தொகுப்புக்காக, சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவரது பல நுால்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது 77வது பிறந்த தினம் இன்று!