ADDED : அக் 23, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அவிநாசி பழனியப்பா சர்வதேச சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள், திருப்பூர் சஹோதயா இடைநிலைப்பள்ளி சிலம்பப் போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியில் பள்ளியின் மூன்று முதல் ஏழாம் வகுப்பு வரை 19 மாணவர்கள் கலந்துகொண்டு சிலம்பக்கலைக்கான தங்கள் அர்ப்பணிப்பையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினர்.
இவர்களில் ஆறு பேர் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.சாதனை புரிந்த மாணவர்களுக்கும் அவர்களை வழிநடத்திய பயிற்சியாளர்களுக்கும் பள்ளி நிர்வாகம் பாராட்டுகளைத் தெரிவித்தது. சிலம்பக்கலையின் மகத்துவத்தை எடுத்துக்காட்டிய இளம் வீரர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.