
நடப்பு ஆண்டில் ஏராளமான அறிமுகங்கள்... இருந்தாலும் எதிர்பார்ப்புக்கு பங்கம் செய்யாமல், நல்ல பெயர் எடுத்தவை மிகக் குறைவே... அப்படிப்பட்ட இடத்தை தக்க வைத்தவைகளில் சாம்பிளுக்கு சில...
ஆப்பிள் ஐபேடு புரோ 2018: விளிம்பிலிருந்து விளிம்பு வரைக்குமான டிஸ்பிளே, பேஸ் ஐ.டி., டைப் சி போர்ட் என பல அம்சங்களுடன் வந்து வரவேற்பை பெற்றுவிட்டது.
மி டிவி 4 ஏ: ஸ்மார்ட் டிவிக்கள் வருகை அதிகரித்த ஆண்டு இது. அதிலும் சயோமி நிறுவனத்தின். மி டிவி 4 ஏ செம ஹிட். குறைந்த விலையில் வந்தது இதன் பிளஸ் பாயின்ட்.
ஆப்பிள் மேக்புக் 2018: 13.3 இஞ்ச் அகலத்துடன், அசத்தலான வெளியீடு. ஆப்பிள் டி 2 செக்யூரிட்டி சிப் அதிகமான பாதுகாப்பை வழங்குகிறது. இன்னும் சொல்வதென்றால் உலகின் அட்வான்ஸ்டு இயங்குதளமான மேக் ஓ.எஸ்., மேஜாவே இதன் கூடுதல் சிறப்பு.
ஒன்பிளஸ் 6டி: இந்தியாவில் அடி எடுத்து வைத்தலிருந்தே இந்த போனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பிரீமியம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் வெகு எளிதாக முதலிடத்தை பிடித்து விட்டது ஒன்பிளஸ். ஏமாற்றம் தராத வரவு.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4: ஆப்பிள் சீரிஸ் 3ஐ விட, இரண்டு மடங்கு அதிக செயல் திறன். நம் இதய துடிப்பை இசிஜி மூலம் அறிந்து கொள்ள இந்த வாட்ச் பயன்படுவது ஒருபக்கம் இருந்தாலும், இந்த படைப்பின் மூலம் வாடிக்கையாளர்களின் இதய துடிப்பை நன்றாக அறிந்துகொண்டுவிட்டது, ஆப்பிள்.

