PUBLISHED ON : டிச 04, 2022

'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், புதிதாக, '3 இன் 1' ஆடியோ சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அடிப்படையில் இது ஒரு ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன் ஆகும். இருப்பினும், இதில் கூடுதலாக போர்ட்டபிள் ஸ்பீக்கர் மற்றும் எல்.இ.டி., டார்ச் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
'ஜெப் சவுண்டு பாம் எக்ஸ் 1' எனும் பெயரில், இந்த மூன்று வசதிகள் கொண்ட இயர்பட்சை அறிமுகம் இந்நிறுவனம் செய்துள்ளது. பார்ப்பதற்கு 'கேண்டிபார்' போன்ற தோற்றத்தில் இது உள்ளது.
இதன் மேற்பகுதியில் இயர்பட்ஸ் இடம்பெற்றுள்ளது. கீழ்ப்பகுதியில் ஸ்பீக்கர் உள்ளது. இயர்பட்ஸ், ஸ்பீக்கர் இரண்டுமே, ஒயர்லெஸ் ஸ்டீரியோ சவுண்டை வழங்குவதாக உள்ளன.
மேலும் இவை, 'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதியும் கொண்டுள்ளன. இதில் 'ரீசார்ஜபிள்' பேட்டரியும் இடம்பெற்றுள்ளது. ஸ்பீக்கர் 19 மணி நேரமும்; இயர்பட்ஸ் 5 மணி நேரமும் தாக்குப் பிடிக்கும். மேற்புறத்தில் எல்.இ.டி., டார்ச் வசதியும் இடம்பெற்றுள்ளது.
விலை: 1,399 ரூபாய்
