உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 23, 2021

அ நிறம் | அளவு
இந்தியாவில், '5ஜி' சேவைக்கான பரிசோதனை முயற்சிகள் சூடுபிடித்துக் கொண்டிருக்க, ஜப்பானும், பின்லாந்தும் இணைந்து, '6ஜி' சேவைக்கான முயற்சிகளில் இறங்கி உள்ளன.
தொலைதொடர்பு துறையில், சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் விதமாக, இவ்விரு நாடுகளும், '6ஜி' முயற்சியில் களம் இறங்கி உள்ளன.
மேலும், இதன் மூலமாக, மூன்றாம் உலக நாடுகளில் பாதுகாப்பான தொழில்நுட்ப சேவைகளை வழங்க வாய்ப்பு ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. இன்னொருபக்கம், சீனா, வரும் 2030ம் ஆண்டில்,'6ஜி' சேவைகளை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
