உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 24, 2021

அ நிறம் | அளவு
கொரோனா காரணமாக, டேப்லெட்டுகள் விற்பனை மீண்டும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. கோவிட் 19 பரவலுக்கு முன்பாக, டேப்லெட் விற்பனை சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. துவக்கத்தில், டேப்லெட்டுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், ஸ்மார்ட்போன்கள் பெரிய திரையுடன் வரவும், விற்பனை குறைய துவங்கியது.
இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று அதிகரிக்கவும், டேப்லெட்டுகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. வகுப்புகள், திரைப்படங்கள் பார்ப்பது போன்ற காரணங்களை முன்னிட்டு, இவற்றின் தேவை உயர்ந்து, விற்பனையும் அதிகரித்து வருகிறது.உலகளவில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், டேப்லெட் விற்பனை, 53 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
