உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 30, 2020

அ நிறம் | அளவு
எல்.ஜி., நிறுவனம், சுருட்டி வைத்துக் கொள்ளக்கூடிய திரையுடன் கூடிய, டிவி மற்றும் கீபோர்டை அறிமுகம் செய்த கையோடு, அடுத்த கட்டமாக, திரையை சுருட்டி வைக்கும் வகையிலான, லேப்டாப் தயாரிப்பில் இறங்கி இருக்கிறது.
இந்த லேப்டாப்பின் திரை, 17 அங்குல திரை கொண்டதாக இருக்கும் என்கிறார்கள். இன்னும் இந்த லேப்டாப் தயாரிப்பு குறித்து, எல்.ஜி., வாய் திறக்கவில்லை. இருப்பினும், இதற்கான காப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருக்கும் விபரங்கள் வெளியாகி உள்ளன. அனேகமாக டிவியை போலவே ஒரு கையடக்க செவ்வக பெட்டியில் சுருக்கி வைக்கும்படியாக இந்த லேப்டாப் இருக்கக்கூடும் என்கின்றனர். அப்படி வரும்பட்சத்தில் லேப்டாப்பை எடுத்துச் செல்வது மிக எளிதாகிவிடும். இடத்தையும் அடைக்காது.
