உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 29, 2020

அ நிறம் | அளவு
'டைமெக்ஸ்' நிறுவனம், அலாரம் கடிகாரத்துடன் கூடிய, ஒயர்லெஸ் சார்ஜரை, விரைவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இந்த சார்ஜருக்கான சான்றிதழை, 'ஒயர்லெஸ் பவர் கன்சோர்டியம்' அண்மையில் வழங்கியிருக்கிறது.
கைக்கடிகாரத் தயாரிப்பில் இருக்கும் டைமெக்ஸ், கால மாற்றத்துக்கு ஏற்ப, புதிய சாதனங்களையும் தயாரிப்பதில் இறங்கி உள்ளது. அண்மையில் இந்நிறுவனம், அதன் முதல் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது நினைவிருக்கக்கூடும். இந்த ஒயர்லெஸ் சார்ஜரின் பெயர், விலை மற்றும் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
