உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 27, 2021

அ நிறம் | அளவு
பிரபல 'போஸ்' நிறுவனத்தின் புதிய, 'கொயட் கம்போர்ட் 45' எனும் 'ஹெட்போன்' விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாக, 'கியு.சி., 45' என அழைக்கப்படும் இது, 'கியு.சி., 35' ஹெட்போனை தொடர்ந்து அடுத்ததாக அறிமுகம் ஆகிறது.
முந்தைய மாடலை விட இந்த புதிய ஹெட்போன் மிகவும் எடை குறைவானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 'பாஸ்ட் சார்ஜிங்' வசதி கொண்ட இந்த இயர்போனை, கால் மணி நேரம் சார்ஜ் செய்தால், இரண்டரை மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இந்த ஹெட்போனில் 'புளுடூத் வி5.1' வசதி இருக்கிறது.
அத்துடன் தேவைப்பட்டால் 3.5 எம்.எம்., ஜேக் வாயிலாக ஒயருடன் இணைத்தும் பயன்படுத்தலாம். இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வரவில்லை.
விலை: 24,400 ரூபாய்.
