உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 26, 2021

அ நிறம் | அளவு
'கூகுள் பிக்ஸல் பட்ஸ் ஏ சீரிஸ்' இயர்போன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன், கடந்த 2019ல் அறிமுகம் ஆன இயர்பட்சின் மேம்பட்ட, எளிதான வடிவமாகும். இந்த புதிய இயர்போனின் பேட்டரி, அதன் 'கேஸ்' உடன் சேர்த்து 24 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்.
கால் மணி நேரம் 'சார்ஜ்' செய்தால், மூன்று மணி நேரம் பயன்படுத்தலாம். இதில், தமிழ் உள்ளிட்ட 40 மொழிகளில், 'ரியல் டைம்' மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த இயர்போன் 25ம் தேதி முதல் இந்திய சந்தைகளில் முன்னணி மின்னணு வர்த்தக தளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை : 9,999 ரூபாய்.
