உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 10, 2022

அ நிறம் | அளவு
'போல்ட் ஆடியோ' நிறுவனம், இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகம் செய்வதன் வாயிலாக, அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் காலடி எடுத்து வைத்துள்ளது. 'போல்ட் காஸ்மிக்' மற்றும் 'போல்ட் டிரிப்ட்' என இரு ஸ்மார்ட்வாட்சுகளை, இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த இரு வாட்சுகளும், ஒருமுறை சார்ஜ் செய்தால், பத்து நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் என, போல்ட் ஆடியோ தெரிவித்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 1.69 அங்குல டி.எப்.டி., எச்.டி. டிஸ்ப்ளே
* 140 வகையான முகத் தோற்றம்
* 60 ஸ்போர்ட் மோடுகள்
* இன்பில்டு கேம்கள்
* ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்
* புளுடூத் காலிங்
விலை விபரம்:
போல்ட் டிரிப்ட்
அதிகபட்ச விற்பனை விலை: 7,999 ரூபாய்.
அறிமுக சலுகை விலை: 1,999 ரூபாய்.
போல்ட் காஸ்மிக்
அதிகபட்ச விற்பனை விலை: 5,999 ரூபாய்.
அறிமுக சலுகை விலை: 1,499 ரூபாய்.
