PUBLISHED ON : செப் 04, 2022

'மிவி' நிறுவனம், இந்தியாவில், மூன்று வகையான ஆடியோ சாதனங்களை வெளியிட்டுள்ளது. 'மிவி டுயோபட்ஸ் ஏ550, எப்70' என இரு இயர்பட்சுகளையும், 'காலர் கிளாஸிக் புரோ' எனும் 'நெக்பேண்டு' ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.
இதன் இரண்டு டுயோபட்ஸ் மாடல்களிலும், புளூடூத் 5.1 இணைப்பு வசதி உள்ளது. கேமிங் அப்ளிகேஷனில் 50 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இவற்றை ஒரு மணி நேரத்துக்கும் குறைவான கால அளவில், 'யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' வாயிலாக சார்ஜ் ஏற்றலாம்.
மேலும் இந்த இயர்பட்சுகளில், இ.என்.சி., எனும், சுற்றுப்புற சப்தங்களை நீக்கும் வசதியும் உள்ளது. இவை நான்கு வண்ணங்களில் வந்துள்ளன. நெக்பேண்டை பொறுத்தவரை, அதிலும் 5.1 புளூடூத் இணைப்பு வசதி உள்ளது. யு.எஸ்.பி., டைப் சி பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், கிட்டத்தட்ட 72 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
விலை:
இயர்பட்ஸ்: 1,599 ரூபாய்
நெக்பேண்டு: 1,199 ரூபாய்
