PUBLISHED ON : ஜூலை 31, 2022

'அக்காய்' நிறுவனம் வெப் ஓ.எஸ்., அடிப்படையில் இயங்கும் 4கே, முழு எச்.டி., மற்றும் எச்.டி., 'ஸ்மார்ட் டிவி' வரிசைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 'டிவி'கள், திங்க்யூ ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் 'மேஜிக் ரிமோட்' வாயிலாக, பயனாளர்களின் தேவையை புரிந்து, அவர்களின் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும்.
வெப் ஓ.எஸ்., தொழில்நுட்பமானது, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படக் கூடியது. மேலும், நாம் ஏற்கனவே பார்த்த நிகழ்ச்சிகளின் வரலாறை வைத்து, புதிய வகையான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை இந்த தொழில்நுட்பம் பரிந்துரை செய்யும்.
அக்காய் நிறுவனத்தின் இந்த வெப் ஓ.எஸ்., டிவிகள் வரிசையில் 32, 43, 50 மற்றும் 55 அங்குல டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. விலையும் நம்மை அடடே சொல்ல வைப்பதாக இருக்கிறது.
அக்காய் 55 வெப் ஓ.எஸ்., 4கே யு.எச்.டி., அதிகபட்ச விலை: 39,990 ரூபாய்
