உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 07, 2022

அ நிறம் | அளவு
பிரபல 'சென்ஹைசர்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'சி.எக்ஸ்., பிளஸ் ஸ்பெஷல் எடிசன்' ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.
மிகத் துல்லியமான இசைக்காக, 'ட்ரூரெஸ்பான்ஸ் டிரான்ஸ்டியூசர்' தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலான பேட்டரி திறன் கொண்டது, இந்த இயர்பட்ஸ்.
காதில் மிக கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. டச் கன்ட்ரோல் வசதியுடன் இருப்பதால், தொலைபேசி அழைப்புகளை எளிதாக கையாளலாம்.
மேலும், வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் வகையில் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' தொழில்நுட்ப வசதியும் இதில் உள்ளது. புளூடூத் 5.2 இணைப்பு வசதியுடன் இந்த இயர்பட்ஸ் வந்துள்ளது.
விலை: 11,785 ரூபாய்.
