'ஆப்பிள்' நிறுவன தயாரிப்பு ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்
'ஆப்பிள்' நிறுவன தயாரிப்பு ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்
PUBLISHED ON : மே 01, 2022

'ஆப்பிள்' நிறுவனம் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றை தயாரிப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், பலருக்கு தெரியாதது, இந் நிறுவனம் 'ஸ்மார்ட்' தண்ணீர் பாட்டிலையும் விற்பனை செய்வது.
ஆப்பிள் நிறுவனம், 'ஹைட்ரேட்ஸ்பார்க்' எனும் நிறுவனத்தின் வாயிலாக, 'ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்'களை விற்பனை செய்கிறது. இரண்டு மாடல்களில் இந்த புதிய பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டில், பிற தண்ணீர் பாட்டில்களை போன்றது தான் என்றாலும், கூடுதலாக சில வசதிகள் இதில் உள்ளன. இந்த வாட்டர் பாட்டிலை, ஆப்பிள் வாட்ச், ஐபோன் போன்ற ஆப்பிள் சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளலாம்.
அதனால் என்ன பலன் என்கிறீர்களா?
நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை அது கண்காணித்து தரவுகளை தரும். அதுமட்டுமின்றி, நாம் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை, பாட்டிலில் இருக்கும் எல்.இ.டி., விளக்கு பிரகாசித்து, நினைவூட்டும். இதற்காக, 'ஹைட்ரேட்ஸ்பார்க்' எனும் செயலியை புளுடூத் வாயிலாக இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த தண்ணீர் பாட்டில், ரீசார்ஜபிள் பேட்டரி மற்றும் சார்ஜர் கேபிள் உடன் வருகிறது. இதில், 'ஹைட்ரேட்ஸ்பார்க் புரோ மற்றும் ஹைட்ரேட்ஸ்பார்க் புரோ ஸ்டீல்' என இரு மாடல்கள் உள்ளன.
முதல் மாடலின் விலை, இந்திய மதிப்பில் 4,500 ரூபாய்.
ஸ்டீல் மாடல் விலை, 6,000 ரூபாய்.
