PUBLISHED ON : மே 01, 2022

'நோக்கியா' சாதனங்களை தயாரிப்பதற்கான உரிமம் பெற்றிருக்கும் 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், அதன் புதிய தயாரிப்புகளை, அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
'நோக்கியா ஜி 21'
'நோக்கியா ஜி' வரிசையில், புதிதாக இந்த 'ஜி 21' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 6.5 அங்குல எச்.டி., திரையுடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன், மூன்று கேமரா செட் அப் கொண்டது. முதன்மை கேமரா 50 மெகா பிக்ஸல் திறன் கொண்டது.
மேலும், 128 ஜி.பி., வரையிலான சேமிப்பு வசதியும் கொண்டிருக்கிறது. தேவைப்படின், 512 ஜி.பி., வரை எஸ்.டி., கார்டு வாயிலாக அதிகரித்துக் கொள்ளலாம். இதில், கைவிரல் ரேகை சென்சார் பக்கவாட்டில் இருக்கிறது. எப்.எம்., ரேடியோவும் உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் வகையில் 5,050 எம்.ஏ.எச்., உடன் வந்துள்ளது.
விலை:
4ஜி.பி., + 64 ஜி.பி., : 12,999 ரூபாய்.
6 ஜி.பி., + 128 ஜி.பி., : 14,999 ரூபாய்.
'நோக்கியா 105, 105 பிளஸ்'
இந்த இரு போன்களும் பியூச்சர் போன்களாகும். இவை இரண்டும் ஒயர்லெஸ் எப்.எம்., ரேடியோ வசதியுடன் வந்துள்ளன. இவை '2ஜி' போன்களாகும். 1.77 அங்குல திரை கொண்டவை. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், கிட்டத்தட்ட 12 மணி நேரம் பேசும் வகையில், இவற்றின் பேட்டரி திறன் உள்ளது.
விலை:
நோக்கியா 105 (2022) : 1,299 ரூபாய்.
நோக்கியா 105 பிளஸ் : 1,399 ரூபாய்.
'நோக்கியா இயர்பட்ஸ்'
நோக்கியாவின் புதிய போன்களுடன், 'நோக்கியா கம்போர்ட் இயர்பட்ஸ்' மற்றும் 'நோக்கியா கோ இயர்பட்ஸ் பிளஸ்' ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவை இரண்டுமே, ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன் ஆகும். இவற்றை ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், ஒருநாள் முழுக்க கேட்கலாம்.
விலை:
நோக்கியா கம்போர்ட் இயர்பட்ஸ்: 2,799 ரூபாய்.
நோக்கியா கோ இயர்பட்ஸ் பிளஸ்: 1,999 ரூபாய்.
