PUBLISHED ON : டிச 09, 2018

அ நிறம் | அளவு
மொபைல் போனில், 'பப்ஜி' உள்ளிட்ட, 'கேம்'களை அதிகம் விளையாட விரும்புவரா நீங்கள்? உங்களுக்கான நல்ல சாய்ஸ் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. அசுஸ் ஆர்.ஓ.ஜி., என்ற புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தி உள்ளது, அசுஸ். இது, 'கேம்' பிரியர்களுக்காகவே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மொபைல், 'ஹேங்' ஆகாமல், 'கேம்' விளையாடவதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 6 அங்குல தொடுதிரை
* 8 + 20 மெகா பிக்ஸல்
* ஸ்நாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி.,
* 8 ஜிபி ரேம் / 128 ஜிபி உள்ளீட்டுத் திறன்
* ஆண்ட்ராய்டு 8.1
* 4000 எம்.ஏ.எச்., பேட்டரி
'பிங்கர் பிரின்ட் சென்சார், பேஸ் லாக்' உள்ளிட்ட பல வசதிகள் இருக்கு. மேலும், 'கேம்' விளையாட, 'ஜாய்ஸ்டிக், மொபைல் கேஸ்' உட்பட பல சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
விலை:ரூ.69,999
