தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பிளாக்பெர்ரி 5ஜி போன்

பிளாக்பெர்ரி 5ஜி போன்

பிளாக்பெர்ரி 5ஜி போன்


PUBLISHED ON : ஆக 29, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீண்டகாலத்துக்குப் பிறகு, 5ஜி ஸ்மார்ட்போனுடன் களமிறங்க இருக்கிறது, பிளாக்பெர்ரி. இந்த ஆண்டுக்குள், பிளாக்பெர்ரி தன்னுடைய, 5ஜி போனை அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.டி.சி.எல்., கம்யூனிகேஷன் நிறுவனத்துடனான கூட்டு முடிந்துவிட்டதாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிளாக்பெர்ரி அறிவித்தது. இதையடுத்து, டி.சி.எல்., பிளாக்பெர்ரி போன்களை தயாரிப்பதை நிறுத்தி விட்டது.இதன்பிறகு, ஆன்வேர்டுமொபிலிட்டி மற்றும் எப்.ஐ.எச்., மொபைல் லிமிடெட் ஆகியவற்றுடன் பிளாக்பெர்ரி கூட்டு வைத்துள்ளது. இவை பாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் துணை நிறுவனங்களாகும்.இந்நிலையில், பிளாக்பெர்ரி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் சென், விரைவில் பிளாக்பெர்ரி அதன் புகழ்பெற்ற, பிசிக்கல் கீ போர்டுடன் கூடிய, 5ஜி போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த புதிய 5ஜி போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் என்பது சிறப்பான செய்தியாகும்.துவக்கத்தில், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்த போன் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us