PUBLISHED ON : ஆக 29, 2020

தேடுபொறி நிறுவனமான கூகுள், அதன் அசிஸ்டென்ட் சேவையில், கூடுதல் வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி, கூகுள் அசிஸ்டென்ட்டை பயன்படுத்தி, ஆடியோ தகவல்களை பதிவுசெய்து அனுப்ப முடியும்.வழக்கமாக, ஆடியோ செய்திகளை அனுப்ப, மைக் படத்தை அழுத்தி பதிவு செய்து, அதன் பின் அனுப்ப வேண்டும். ஆனால் இப்போது, 'ஹை கூகுள், ஆடியோ செய்தியை இன்னாருக்கு அனுப்பு' என சொல்லி செய்தியை தெரிவித்தால் போதுமானது.மேலும், கூகுள் அசிஸ்டென்ட்டை பயன்படுத்தி, மூன்றாம் நபர் செயலிகள் மூலமாகவும், அதாவது, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகள் மூலமாகவும் செய்திகளை அனுப்பமுடியும்.ஆனால் இதில் ஒரே ஒரு சிக்கல்... நாம் பேசி முடித்த அடுத்த நொடியே, செய்தி அனுப்பப்பட்டு விடும். செய்தியை மீண்டும் கேட்டு உறுதிப்படுத்தி, அதன் பிறகு அனுப்புவது என்பதெல்லாம் முடியாது. எனவே, சொல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
